B.Sc பட்டதாரிக்கு ரூ 30,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை
மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST) கல்வி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பி.எஸ்சி பட்டதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : ஶ்ரீ சித்ரா திருநல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி (SCTIMST)
மேலாண்மை : மத்திய அரசு
பணி : தொழில்நுட்ப உதவியாளர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 02
கல்வித் தகுதி : பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 28 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஊதியம் : ரூ.30,300 மாதம்
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.sctimst.ac.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 20.06.2020 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : IV FLOOR, Achutha Menon Centre for Health Science Studies of the Institute at Medical College Campus, Thiruvananthapuram.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.