தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், ஆகஸ்ட் மாதத்தில் 40 சதவிகிதம் வரை கல்விக்கட்டணம் செலுத்தவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் பல கல்வி நிறுவனங்களில் முழுமையான கல்விக்கட்டணத்தை செலுத்தவேண்டும் என பெற்றோர்களிடம் வற்புறுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இந்த விவாகரம் தொடர்பாக அரசு தரப்பி்ல் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இதைடுத்து, முழு கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகள் திறந்த பிறகு தவணை முறையில் கல்விக்கட்டணத்தை வசூலிக்கவேண்டு்ம் காலக்கெடு நிர்ணயித்து கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவை மீறி கல்விக்கட்டணம் வசூலிக்கும் பள்ளிக்கூடங்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.