இடுகையிட்டது
csc மக்கள் சேவை மையம்
தேதி:
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இந்திய தபால் துறை வழங்கும் மாத வருமான திட்டக் கணக்குகள் குறித்த தகவல்களை அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான indiapost.gov.in. இல் தெரிவித்துள்ளத்பு. தபால் அலுவலக மாத வருமான திட்டக் கணக்கை தனி நபர்களால் காசோலை அல்லது குறிப்பிடப்பட்ட பணத்தை செலுத்தி கணக்கை திறக்க முடியும்.
கணக்கின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். தபால் அலுவலக மாத வருமான திட்டம் கணக்கு பற்றி தெரிந்து கொள்ள 5 தகவல்கள்:
1. வட்டி விகிதங்கள்: தபால் அலுவலகம் மாத வருமானத் திட்டத்திற்கு 7.7 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது.
2. தொகை: மாத வருமானக் கணக்கை அமைக்கத் தேவையான குறைந்த பட்ச தொகை 1,500. அதிகபட்ச முதலீட்டு வரம்பு 4.5 லட்சம். கூட்டு கணக்கு ( joint account) என்றால் 9 லட்சம் என்று இந்தியா தபால் துறை அறிவித்துள்ளது. 3. முன்கூட்டியே திரும்ப பெறுதல்: கணக்கு திறந்து ஒரு வருடம் கழித்து பணத்தை கசோலையாக மாற்ற முடியும். மூன்று வருடத்திற்கு முன்பு கணக்கை முடித்து முதலீடு செய்த பணத்தை எடுக்க வேண்டினால் 2 சதவீத வட்டி பிடித்து வைத்துக் கொடுக்கப்படும்.
4. கணக்குகளின் எண்ணிக்கை: மாத வருமானத் திட்டக் கணக்கை ஒரு தபால் நிலையத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மாற்றலாம். முதலீட்டாளர்கள் எந்தவொரு தபால் நிலையத்திலும் அதிகபட்ச முதலீட்டு வரம்புக்கு உட்பட்டு கணக்குகளை திறக்க முடியும் என்று இந்திய போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
5. பிற வசதிகள்: மாத வருமானத் திட்டக் கணக்கை திறக்கு நேரத்தில் நாமினி யார் என்பதை குறிப்பிடலாம். அதை முறையாக மாற்றவும் செய்யலாம்.