மத்திய அரசின் பொது இ-சேவை மையம்
CSC பொது இ - சேவை மையம்
இனிய இந்த வலைத்தளத்தில் மத்திய அரசின் பொது இ-சேவை மையம் குறித்த சிறப்புகள், வசதிகள், வாய்ப்புகள் CSC அமைப்புமுறை, CSC துவக்குவதற்கான தேவையான கல்வி தகுதி, இட வசதி, பண வசதி மற்றும் எங்கெங்கெல்லாம் ஆரம்பிக்கலாம், யார் யாரெல்லாம் துவக்கலாம். போன்ற தகவல்கள் இடம் பெற்று உள்ளன. மேலும் மக்களுக்கு தேவையான சான்றிதழ்கள் அவர்களுக்கு அருகிலே பெற, உங்கள் ஊருக்கு அருகே CSC மையங்கள் உள்ள இடங்கள். மையத்தின் பெயர், முகவரி, தொலைபேசிஎண் ஆகியனவும் உள்ளது. CSC குறித்த தகவல்களும், கிராம தொழில் முனைவோர் எப்படி பயன் படுத்த வேண்டும், மையம் இயக்க தேவையான வழி முறைகள், தொழில் நுட்பஉதவிகள், கூடுதல் தகவல்கள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், என்ன, என்ன சேவைகள் வழங்க முடியும் எனவும், தெரிந்து கொள்ளலாம்.
அறிமுகம்:- -
பொது சேவை மையம் (CSC) இந்திய அரசு செயல் படுத்தி வரும் தேசிய மின்னனு திட்டத்தின் ஒரு பகுதி. அரசின் சேவைகள் மக்களுக்கு விரைவில் சென்று சேரவும் இடை தரகர்கள் இன்றி வழங்கவும் ஏற்படுத்தபட்ட திட்டம், அரசின் பல்வேறு துறைகள் மக்களுக்கு வழங்கும் சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் உயர்ந்த தரத்தில் குறைந்த செலவில் கிடைக்க செய்வது தான் இத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். G2C, B2C, கிராம புறங்களில் சுமார் 2,50,000 CSC மையங்கள் ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டு உள்ளது. இத் திட்டம் (PUBLIC PRIVATE PARTNERSHIP PPP - பொது-தனியார் பங்களிப்பு) கட்டமைப்பு மூலம் செயல் படுத்தப்படுகிறது.
CSC - சிறப்பு அம்சங்கள்:
கிராம தொழில் முனைவோரை உருவாக்குதல், தனியார் வழங்கும் சேவைகளும்
வழங்குதல் , சமுதாய மக்களின் தேவைகளின் அடிப்படையில்
பல்வேறுபட்ட சேவைகளை வழங்குதல் அவர்களின் திறமைகளை திறன்களை
வெளிகொனருதால், வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல்.
அரசு மற்றும் அரசுசார நிறுவனங்களின் சேவை முகவராக செயல்படல்,
பல்வேறுப்பட்ட G2C and B2C சேவைகள் ஒரே இடத்தில் வழங்குதல் ஒரு csc
பொது மையம் 6 கிராமங்களை உள்ளடக்கி சேவை செய்யும். இதன் மூலம்
முதலில் 6,00,000 கிராமங்கள் பயன் பெறும் என்பதையும் இன்று தாண்டிவிட்டது.
கிட்டத்தட்ட 10,00,000 மேல் கிராம, நகர்புறங்களை சென்றடையும் என்று
எதிர்பார்க்கலாம்.
CSC - யின் அமைப்பு முறை :
பொது - தனியார் பங்களிப்பு முன்மாதிரி அடிப்படையில் 3 அடுக்கு அமைப்பு முறையில் வழங்கபடுகிறது.
State Designed Authority (SDA) - மாநில அரசின் கிழ் இயங்கும் மையங்கள்-மாநிலஅரசால் நியமிக்கபட்ட அமைப்பு CSC பொது சேவை மையங்களின் நிர்வாக செயல்படுகளின் பொறுப்புகளை ஏற்கும்
Administration Center Agency-SCA – சேவை மைய முகமை மூலம் இயக்குதல். பொது சேவை வழங்கும் உரிமையாளர் கிராம, நகர் புறங்களில் சேவை வழங்கும் இடங்களை உள்ளூர் அல்லது மாநில அளவில் தேர்ந்தெடுத்து சேவைகள் வழங்கலாம் இந்த முகமை சுமார்
500-1000 CSC பொது மையங்கள் நடத்தவும் பிரச்சாரங்கள் செய்து ஊக்குவிக்கவும் வழி நடத்தி பொறுப்பேற்க்கும் என தெருவித்துள்ளனர்.
Town Level Entrepreneur - கிராம புற தொழில் முனைவோர் நிர்வகிக்கும் மையங்கள்.
கிராம புற தொழில் முனைவர் பொது சேவை மையத்தை நடத்துபவர்.அதே கிராமத்தில்
வசிப்பவராக இருக்கவேண்டும்.மையத்தை சுற்றி உள்ள 6 (1+5) கிராமங்களுக்கு
சேவைகள் வழங்க உரிமை வழங்கப்படும்.
பொது சேவை மையம் CSC அமைக்க, இணையதளம் வழி விண்ணப்பம் செய்ய Services Provided by CSC
பாஸ்போர்ட்,பான் கார்ட், ஆதார் என்ரோல்மென்ட், பென்ஷன், போன்ற மத்தியஅரசின் திட்டங்களை பயன்படுத்தி கொள்ள வழங்கப்படும் சேவைகள், மற்றும் வாக்காளர் அட்டை பெறவும்.திருத்தம் செய்யவும்
இ – மாநில (E-District) சேவைகளான இன்சூரன்ஸ் , பிறப்பு/இறப்பு சான்றிதழ் பெறவும், தேசிய திறந்த நிலை பள்ளியில் சேர படிக்க பதிவு செய்தல் என CSC யில் பல சேவைகள் வழங்கப்படுகிறது.