இலவச pan card....?

ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வங்கியில் வேலை

ரூ.75 ஆயிரம் ஊதியத்தில் வங்கியில் வேலை

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் பொதுத் துறை வங்கிகளுக்கான பணியாட்களை வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (ஐபிபிஎஸ்) தேர்வு செய்கிறது. 

அதன்படி, தற்போது பொதுத் துறை வங்கியில் காலியாக உள்ள ஆசிரியர் (Faculty) பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பை ஐபிபிஎஸ் வெளியிட்டுள்ளது. 

மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு மாதம் ரூ.75 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பொதுத்துறை வங்கிகள்

தேர்வு வாரியம் : வங்கிப் பணியாளர் தேர்வு வாரியம் (IBPS)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : ஆசிரியர் (Faculty)

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 62 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.75 ஆயிரம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.ibps.in இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Division Head (Administration) Institute of Banking Personnel Selection, IBPS House, Plot No.166, 90 ft DP Road, Off Western Express High way, Kandivali (East), Mumbai 400 101.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.ibps.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினைக் கிளிக் செய்யவும்.